சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடமிருந்து பறிமுதல் செய்த நகைகளைஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு.

by Editor / 29-01-2025 05:29:21pm
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடமிருந்து பறிமுதல் செய்த நகைகளைஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு.

கடந்த 1991-96-ம் ஆண்டு வரை தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்துக் குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது, இவ்வழக்கில் ஜெயலலிதாவின் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

 ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழ்நாடு வருகின்றன.

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 27 கிலோ நகைகள், 1,562 ஏக்கர் நிலப்பத்திரம் ஆகியவற்றை தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க கர்நாடக அரசுக்கு பெங்களூரு நகர நீதிமன்றம் உத்தரவு.

 தங்க, வைர, வெள்ளி நகைகள் மற்றும் நிலப்பத்திரங்களை வரும் பிப்ரவரி 14, 15 தேதிகளில் ஒப்படைக்க வேண்டும்.

அன்றைய தினம் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், பெட்டிகளுடன் வர வேண்டும். உரிய வாகன, பாதுகாப்பு வசதிகளை ஏற்பாடு செய்ய வேண்டும்.
.
 பொருட்கள் எடுத்துச் செல்லும் போது அதனை மதிப்பீடு செய்ய மதிப்பீட்டாளர்கள் இருக்க வேண்டும். ஒட்டுமொத்த நடைமுறையும் வீடியோ பதிவு செய்ய வேண்டும்.

1996ம் ஆண்டு ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் நடத்திய சோதனையின் போது இந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 2004ல் சொத்துக்குவிப்பு வழக்கு கர்நாடகத்திற்கு மாற்றப்பட பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களும் பெங்களூரு கருவூலத்தில் வைக்கப்பட்டன.

 

Tags : சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிடமிருந்து பறிமுதல் செய்த நகைகளைஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு

Share via

More stories

Logo