பா.ஜ.க சார்பில் மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது.
சென்னை தி.நகரில் ம.பொ.சி.சிலையிலிருந்து ஞாயிறு மதியம் மூன்று மணி அளவில் பா.ஜ.க சார்பில் மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி வீடுதோறும் சுதந்திர தினத்தன்று மூவர்ண கொடியை ஏற்ற வேண்டும்என்று சொல்லியதற்கு வலு சேர்க்கும் விதமாக இந்த பேரணி நிகழ்த்தப் பெற்று கமலாலயத்தில் நிறைவு பெற்றது. பாஜக தமிழ் நாடு மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் இந்த பேரணி நடத்தப்பட்டது. உன் பேரணியில் பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் வணிகர் சங்க உறுப்பினர்கள் பெண்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கு மேற்பட்டோர் கையில் தேசிய கொடி ஏந்தி பேரணியில் கலந்து கொண்டனர் சுதந்திர தினத்தன்று ஒவ்வொரு இல்லத்திலும் தேசிய கொடியை ஏற்றி வைப்பதை ஊக்குவிக்கும் முகமாக இப்ப பேரணி நடைபெறுகிறது.
Tags :

















