குற்றால மெயின் அருவியில் ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு குவிந்த சுற்றுலா பயணிகள்.

by Staff / 29-06-2025 10:05:17am
குற்றால மெயின் அருவியில் ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு குவிந்த சுற்றுலா பயணிகள்.

தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் தென்மேற்கு பருவ மழை காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின் காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கானது ஏற்பட்டதோடு சுற்றுலா பயணிகள் குளிக்க நான்கு நாட்கள் தடையானது விதிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து நேற்றைய முன்தினம் நீர் வரத்து சீரானதால் அனைத்து குற்றால அருவிகளிலும் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் குற்றாலத்திற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுகிறது மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலி அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகளின் வருகை தொடர்ந்த அதிகரித்து காணப்படுகிறது.

குறிப்பாக மெயின் அருவி கரையில் காலை முதலே ஆயிரக்கணக்கான  சுற்றுலா பயணிகள் ஆர்ப்பரிக்கும் நீரில் உற்சாக குளியல் இட்டு வருகின்றனர். 

அருவி பகுதியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருப்பதால் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில்  ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags : குற்றால மெயின் அருவியில் ஞாயிறு விடுமுறையை முன்னிட்டு குவிந்த சுற்றுலா பயணிகள்.

Share via