ரீல்ஸ் மோகம் இளைஞரை பட்டாக்கத்தியால் கொடூரமாக தாக்கிய சிறுவர்கள் கைது
திருத்தணியில் எடுக்கும் மோகத்தால் மூன்று சிறுவர்கள் ஒரு வட மாநில இளைஞரை பட்டாக்கத்தியால் கொடூரமாக தாக்கிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருத்தணியை நோக்கி சென்ற மின்சார ரயிலில் கஞ்சா போதையில் இருந்த சிறுவர்கள் அங்கிருந்த மகாராஷ்டிரா சார்ந்த சூரஜ் என்ற இளைஞரை அரிவாளால் மிரட்டி வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் திருத்தணி ரயில் நிலையம் அருகே உள்ள ரயில்வே குடியிருப்பு பகுதிக்கு அவரை அழைத்துச் சென்று பட்டா கத்தியால் சர மரியாக வெட்டியுள்ளனர். இதில் சூரஜ் உடல் முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. இந்த கொடூர தாக்குதலை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் ரீல்சாக பதிவிட்டுள்ளனர். காயம் அடைந்த சூரஜ் தற்போது திருவள்ளுவர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார் .திருத்தணி காவல்துறையில் இந்த மூன்று சிறுவர்களையும் கைது செய்து சிறுவர்கள்.சீராய்வு நீதிமன்றத்தில் நிறுத்தினர். நீதிமன்ற குழுமம் இரண்டு சிறுவர்களை சீர் ஆய்வு பள்ளிக்கு அனுப்பி ஒருவர் உடல்நல குறைவின் காரணமாக அவருடைய பெற்றோருக்கு நிபந்தனையோடு அனுப்பி வைத்தனர்.
Tags :


















