தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் சந்தித்து பேசினார்.
தமிழக முதலமைச்சர்மு.க.ஸ்டாலினை முன்னாள் மத்திய நிதியமைச்சர் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்கள் ஒருவருமான ப. சிதம்பரம் இன்று ஆழ்வார்பேட்டை இல்லத்தில் சந்தித்து பேசினார். டிசம்பரில் இருந்து காங்கிரஸ் தேர்தல் தொகுதி பங்கீட்டுக் குழு அறிவிக்கப்பட்ட திலிருந்து காங்கிரஸ் கட்சி சார்பாக பல்வேறு கருத்துக்கள் வெளிவந்து... கூட்டணி இறுதி செய்ய விடாமல்.. நீடிக்கக்கூடிய நிலையில் சமீபத்தில் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் முதற்கட்ட பேச்சுவார்த்தை அண்ணா அறிவாலயத்தில் நடத்தினார். இருப்பினும், ஒரு தெளிவான முடிவு எட்டப்படாமல் அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் ஆட்சியில் பங்களிக்க வேண்டும் என்கிற கோரிக்கையில் இருந்து காங்கிரஸ் விலகாத நிலையில், இழுபறி தொடர்ந்து கொண்டிருந்தது. இந்நிலையில் தான், ப. சிதம்பரம் முதலமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த, இந்திய காங்கிரஸ் தலைமையிடமிருந்து தகவல் வந்ததை அடுத்து அவர் இன்று சந்தித்துள்ளார். இன்று கூட்டணி இறுதி செய்யப்படுமா? என்கிற கேள்வி பொதுவாக எழுந்துள்ளது. இல்லை, காங்கிரஸ் திமுக கூட்டணியை விட்டு வெளியேறுமா? அல்லது வெளியேற்றப்படுமா? என்பது இன்னும் ஒரு சில மணி நேரங்களில் தெரிந்து விடும்.
Tags :



















