பழனியில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடுஅமைச்சர் தொடங்கிவைத்தார்.

by Editor / 24-08-2024 10:00:54am
பழனியில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடுஅமைச்சர் தொடங்கிவைத்தார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடுநடைபெறுவதைமுன்னிட்டு 
மாநாட்டு நுழைவாயிலில் மழை வடிவிலான பிரம்மாண்டமான செட்-ல் சிவன்,பார்வதி, முருகன் விநாயகர், அருணகிரிநாதர், வீரபாகு போன்ற உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முகப்பில் ஆறுபடை வீடு அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாட்டுக்கு வரக்கூடிய பக்தர்கள் அனைவருக்கும் முருகனின் ராஜ அலங்கார படம், திருநீறு, குங்குமம், 200 கிராம் பஞ்சாமிர்தம், கந்த சஷ்டி புத்தகம், லட்டு, முறுக்கு ஆகியவை அடங்கிய பிரசாத பைகள் வழங்கப்பட உள்ளன.

பழனியில் இன்று நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

பழனியில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடுஅமைச்சர் தொடங்கிவைத்தார்.
 

Tags : பழனியில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடுஅமைச்சர் தொடங்கிவைத்தார்.

Share via