கும்மிடிபூண்டியில் மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமை செய்து கொலை-ஒருவர் கைது.
கும்முடிபூண்டியில் மூன்று வயது குழந்தை வட மாநில இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை சம்பவம் மிகப்பெரிய அதிர்வலையை உருவாக்கி உள்ளது. நீதி கேட்டு கிராம மக்கள் போராடி வருகின்றனர். பீகாரைச் சேர்ந்த பிபின் மஞ்சி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளதோடு அவரோடு சேர்ந்த மூன்று பேரும் குழந்தைக்கு பிஸ்கட் வாங்கி கொடுத்து அழைத்துச் சென்று கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறையினர் மூன்று பேரை தேடி வருகின்றனர். இந்த கொடூர சம்பவத்திற்கு தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். பெண்கள் அனைவரும் தங்களையும் தங்கள் குழந்தைகளையும் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் என்றும் கேட்டுக் கொண்டுள்ளதோடு அரசு என்று ஒன்று உள்ளதா என்கிற கேள்வியையும் எழுப்பி உள்ளார். சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் எதிர்ப்பு குரலை பதிவு செய்துள்ளார்.. குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிக் கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் தன் கருத்தை பதிவு செய்துள்ளார்.
Tags :


















