மத்திய பல்கலைக்கழகங்களில் எம்.ஏ.,எம்.எஸ்.சி.,எம்.பி.,சேர விண்ணப்பிக்கலாம்

by Admin / 19-05-2022 09:23:52pm
மத்திய பல்கலைக்கழகங்களில் எம்.ஏ.,எம்.எஸ்.சி.,எம்.பி.,சேர விண்ணப்பிக்கலாம்


இந்தியா முழுவதுமுள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள துறைகளின் எம்.ஏ, எம்.எஸ்.சி.,எம்.பி.ஏ
கலை,அறிவியல்,வணிக மேலாண்மை சார்ந்த படிப்புகளில் சேர பொது நுழைவுத்தேர்வுக்குவிண்ணப்பிக்க இன்று முதல் இணையதளத்தில் வரும் ஜீன் 18ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றுதேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.இந்தியாவில் 42 மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளன.தமிழ்நாட்டில் திருவாரூரிலும் புதுச்சேரியில் காலாப்பட்டிலும் மத்திய பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன.சமீபத்தில் மத்திய பல்கலைக்கழக இளநிலை படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதைத்தொடர்ந்து இப்பொழுது முதுநிலை மேல் படிப்பிற்கும் நுழைவுத்தேர்வு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கைநடைபெற உள்ளது. இதற்கு முன் பல்கலை த்துறைகளே நேர்முகத்தேர்வு நடத்தி மாணவர் சேர்க்கையை
மேற்கொண்டன.மாணவர்கள் விண்ணப்பிக்க https// cuet.nta.nic.inஇணைய முகவரி வழியாக விண்ணப்பிக்கலாம்.

 

Tags :

Share via