அன்பில் மகேஷ் வீட்டின் முன் திமுகவினர் போராட்டம்
தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதில் ரூ.100 கோடி வரை முறைகேடு செய்ததாக எழுந்த புகாரின் பேரில், திமுக Ex.அமைச்சர் அன்பில் மகேஷ் வீட்டில் இன்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சோதனையின் போது சட்ட ஆலோசனைகளை வழங்க வந்த திமுக வழக்கறிஞர்களை உள்ளே செல்ல போலீசார் அனுமதிக்காததை கண்டித்து, அவரின் வீட்டின் முன் திமுக தொண்டர்கள் “போலீஸ் அராஜகம் ஒழிக” என கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Tags :



















