தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா

by Admin / 02-09-2022 11:31:50pm
தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா


தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி  பயிற்சி  நிறுவன மாணவர்களுக்கான   விருதுகள்  வழங்கும் விழா 04.09.2022(ஞாயிற்றுக்கிழமை)அன்று மாலை 5.00மணியளவில் சென்னை,கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது .திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் 2009முதல்2014 ஆம் ஆண்டுகள் தேர்வு செய்யப்பட்ட  சிறந்த  திரைப்படங்களின்  தயாரிப்பாளர்களுக்கு  முதல் பரிசு ரூ  2இலட்சம் ,இரண்டாம் பரிசு ரூபாய் 1 இலட்சம்,மூன்றாம் பரிசு ரூ.75 ஆயிரம்,சிறந்த படம் சிறப்புப்பரிசுரூ .75 ஆயிரம் 23 தயாரிப்பாளர்களுக்கு ரூ,26,25,000/- காசோலையும்,சிறந்த நடிகர்,நடிகையர் மற்றும் தொழில் நுட்பக் கலைஞர் என 160 பேருக்குத்  தலா 5 பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது.

சின்னத்திரை விருதுகள் 2009 ஆண்டு முதல் 2013 ஆண்டுகள் வரை சிறந்த நெடுந்தொடர்களின் தயாருிப்பாளர்களுக்குமுதல் பரிசுரூ.2 லட்சம்,இரண்டாம் பரிசு ரூ 1 இலட்சம் மற்றும் ஆண்டின் சிறந்த  வாழ்நாள் சாதனையாளர்களுக்குத்தலாரூ.1 இலட்சம் என 20  பேருக்கு ரூ.25 இலட்சத்திற்கான  காசோலையும்  சிறந்த  கதாநாயகன், கதாநாயகி  மற்றும்  தொழில் நுட்பக்கலைஞர்  என 81 பேருக்கு 3 பவுன்  தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது .தமிழக அரசின் திரைப்பட  விருது வழங்கும் விழா கலைவாணர்  கலையரங்கில்  மாலை 4.00மணிக்கு நடைபெறுகிறது.

தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா
 

Tags :

Share via