பெட்ரோல் குண்டுவீச்சு.. சிறார்கள் 3 பேர் கைது
நெல்லை சங்கரன்கோவில் சாலையில் உள்ள புறக்காவல் நிலையம் அருகே நேற்றிரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் 3 சிறார்கள் தச்சநல்லூர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் ராமையன்பட்டி, கண்டிகை பேரியைச் சேர்ந்த சிறார்கள் 3 பேரை கைது செய்து மானூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தின்போது 3 பேரும் கஞ்சா போதையில் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Tags :


















