2026ல் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற கூட்டணி-டாக்டர் கிருஷ்ணசாமி.

2026 சட்டமன்ற தேர்தல் - டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள மாநாட்டில் புதிய தமிழகம் கட்சியின் நிலைப்பாட்டினை அறிவிப்போம - கோவில்பட்டியில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதியில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர்.கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்
தமிழகத்தில் பல்வேறு கிராமப்புறங்களில் குடிநீர் வசதி, தெருவிளக்கு, சாலை வசதிகள் இல்லை, குறிப்பாக தேவேந்திர குல வேளாளர் மக்கள் வாழும் கிராமங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிகள் வழங்கப்படவில்லை, ஏற்கனவே பார்த்த வேலைக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்று பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு மத்திய அரசு ரூபாய் 2000 கோடி விடுவித்துள்ளது. தமிழக அரசு ஏற்கனவே பார்த்த பணிகளுக்கு ஊதியம் வழங்குவது மட்டுமின்றி, மீண்டும் பணிகள் வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கவில்லை என்றால் புதிய தமிழகம் கட்சி சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். இந்தியாவில் 100நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் மிகப்பெரிய மோசடி நடப்பது தமிழகத்தில் தான்
ஆதிதிராவிடர், தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கான இட ஒதுக்கீட்டினை அருந்ததியர் சமூகத்திற்கு தாரை வார்க்க கூடாது அதற்கு இந்த அரசு உடந்தையாக இருக்க கூடாது என்பதனை வலியுறுத்தி மே 17ந்தேதி திருச்சியில் ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறவுன்ளது.
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கதோடு தான் டிசம்பரில் புதிய தமிழகம் கட்சியின் மாநில மாநாடு மதுரையில் நடைபெறுகிறது.
2026 சட்டமன்ற தேர்தல் கூட்டணியை முடிவு செய்ய இன்னும் காலம் இருக்கிறது. இப்போது புதிய தமிழகம் கட்சியை கிராமங்கள் தோறும் வலுப்படுத்தி வருகிறோம். 2026ல் தற்போது இருக்கும் திமுக ஆட்சி மாற்றி அமைக்கப்படவேண்டும், அதற்கு வலுவான கூட்டணி அமைக்கப்பட வேண்டும், அந்த கூட்டணி ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிக்க கூடிய கூட்டணியாக இருக்க வேண்டும். டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள மாநாட்டில் புதிய தமிழகம் கட்சியின் நிலைப்பாட்டினை அறிவிப்போம்
மாதம் ஒருமுறை மின்சார கட்டணம், நீட் தேர்வு ரத்து, கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் என தேர்தலில் கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் திமுக அரசு செய்யவில்லை என்ற போது எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் பொறுத்திருப்பது தவறுதான் பொங்கி எழு வேண்டும்
இந்தியா - பாகிஸ்தான் பிரச்சினை சுதந்திரத்திற்கு முன்பே தொடங்கி விட்டது. இந்தியா - பாகிஸ்தான் என்று பிரிவினையாகி இருக்க கூடாது.மதத்தின் அடிப்படையில் பிளவுபட்டது ஏற்புடையதல்ல, ஆங்கிலேயர்கள் திட்டமிட்டு பிளவு படுத்தி இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்துவிட்டனர். இங்கு மட்டுமல்ல, அவர்கள் எங்கெல்லாம் ஆட்சியில் இருந்தார்களோ அங்கு எல்லாம் இதே போன்ற பிரச்சினைகளை உருவாக்கி வைத்துள்ளனர்.
இலங்கையில் ஆட்சியில் தமிழர்களுக்கு சமஉரிமை கொடுத்து இருக்க வேண்டும், அதனை கொடுக்கவில்லை,பாகிஸ்தான் என்ற நாடு இந்தியாவிற்கு எதிராக உருவாக்கப்பட்டது. அது இறையாண்மைமிக்க தேசம் கிடையாது. பயங்கரவாதிகள், தீவிரவாதிகளை உருவாக்கி பாகிஸ்தான் இந்தியாவிற்கு அனுப்பி வைத்துள்ளது
காஷ்மீர் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் என்பது சாதாரணமாக கருத முடியாது போர் யுத்தமாக தான் கருத முடியும்,இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நடவடிக்கை எடுத்தது இதனை இந்தியாவில் அனைவருமே வரவேற்றோம்,ஆக்கிரமிப்பு காஷ்மீரை நாம் கைப்பற்றவில்லை, எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு பாகிஸ்தான் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை.காஷ்மீர் பஹல்காமில் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டார்களா அழிக்கப்பட்டார்களா என்பது தெரியவில்லை,இப்படிப்பட்ட சூழ்நிலையில் நேற்றைய தினம் அமெரிக்கா தலையீட்டில் போர் நிறுத்தம் என்று செய்திகள் வருகின்றன.உலகளவில் இந்தியா ஐந்தாவது வல்லரசாக இருக்கிறது. நம்முடைய நிலைமையை இன்னொரு நாடு முடிவு எடுக்கக் கூடிய அளவிற்கு இருப்பது ஏற்புடையதல்ல,இந்தியா- பாகிஸ்தான் இடையே சமரசம் ஏற்படும் என்றாலும் இரு நாடுகளும் உட்கார்ந்து பேசி அதை இந்தியா தான் அறிவிக்க வேண்டும் தவிர இன்னொரு நாட்டின் அதிபர் அறிவிப்பது தவறான முன்னுதாரணம் என்றார்.
Tags : 2026ல் ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற கூட்டணி-டாக்டர் கிருஷ்ணசாமி