தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில்  அமைச்சர் சேகர்பாபு இரவில் திடீர் ஆய்வு.

by Editor / 11-05-2025 11:23:42pm
தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில்  அமைச்சர் சேகர்பாபு இரவில் திடீர் ஆய்வு.

 தென்னிந்தியாவில் பிரசித்திபெற்ற ஆலயமாக விளங்குவது தென்காசி அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலயமாகும் இந்த ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை  இரவு 8 மணி அளவில் தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தனது மனைவியுடன் திடீர் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார் பின்னர் கோவில் வளாகத்தில் ஆய்வு செய்ததுடன் கோவில் அருகில் அமைந்துள்ள செயல் அலுவலர் அலுவலகத்திலும் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் அறங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணன் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆய்வின்போது கோவிலில் உள்ள இரண்டு தேர்களில் அம்மன் பவனி வரும் தேர் உடைந்த நிலையில் காணப்படுவதால் அதனை விரைவில் சரி செய்யுமாறு அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார் அப்போது அரங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணன் தானே அந்த தேரை விரைவில் சரி செய்து கொடுப்பதாக அமைச்சரிடம் தெரிவித்தார். மேலும் கோவில் வளாகத்தில் போதிய மின்விளக்குகள் இல்லாததை சுட்டிக்காட்டிய அமைச்சர் விரைவில் அதனை செய்திடுமாறு அதிகாரிகளிடம் தெரிவித்தார். மேலும் கோவிலின் அருகில் அமைந்துள்ள கழிப்பிடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார் அங்கேயும் போதிய வசதிகள் செய்து கொடுக்குமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.காசி விஸ்வநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் கடந்த ஏப்ரல் ஏழாம் தேதி மிகவும் விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக திருப்பணி வேலைகள் முறையாக நடைபெறவில்லை என வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் திருப்பணி வேலைகள் குறித்து சென்னை ஐஐடி குழுவினர் கோவிலில் ஆய்வு செய்து நீதிமன்றத்தில் சமர்ப்பித்திட உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு இருந்தது அதேபோல் ஐஐடி குழுவினரும் கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கோவில் வளாகத்தில் ஆய்வு செய்து அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து உள்ளனர். இந்நிலையில்தான் அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டதாக கூறப்படுகிறது.


 

 

Tags : தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில்  அமைச்சர் சேகர்பாபு இரவில் திடீர் ஆய்வு.

Share via