கன்னியாகுமரியில் கடையடைப்பு.

கன்னியாகுமரி மாவட்ட அனைத்து வியாபாரிகள் சங்க ஆலோசனை கூட்டம் தலைவர் தம்பித்தங்கம் தலைமையில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில அமைப்பாளர் டேவிட்சன் உள்பட மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு சொந்தமான கடைகளில் ஏற்கனவே அமலில் இருப்பது போன்று 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை 15 சதவீதம் வாடகை உயர்த்தி ஏற்கனவே கடையை நடத்திய வருபவருக்கே வாடகைக்கு விட வேண்டும். பொது ஏலத்துக்கு விடக்கூடாது என தீர்மானம் இயற்றப்பட்டது. பொது ஏலம் விட எதிர்ப்பு தெரிவித்து இன்று ஒரு நாள் ( மார்ச் 18) கடையை அடைத்து போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, கன்னியாகுமரியில் இன்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
Tags : கன்னியாகுமரியில் கடையடைப்பு