ஆள் நடமாட்டம் இல்லாத ஆலயத்தில் உண்டியல் கொள்ளையில் ஈடுபட்ட திருடன் சிக்கிய பரிதாபம்

by Editor / 31-03-2025 05:18:16pm
ஆள் நடமாட்டம் இல்லாத ஆலயத்தில் உண்டியல் கொள்ளையில் ஈடுபட்ட திருடன் சிக்கிய பரிதாபம்

 கூடங்குளம் அடுத்த மேற்கு பகுதியில் அமைந்துள்ளது எஸ்.எஸ்.புரம் இப்பகுதியின் காட்டுப் பகுதியில் ஆகாச சாஸ்தா கோவில் உள்ளது. கூடங்குளம் பகுதியைச் சார்ந்த ஒரு சில பொதுமக்களுக்கு சாஸ்தா கோவிலாக விளங்கி வந்த நிலையில் பக்தர்களால் கோவில் உண்டியலில் போடப்படும் பணம் பல தடவை மர்ம நபர்களால் திருடப்பட்டது. இதையடுத்து கூடங்குளம்  காவல் ஆய்வாளர் ரகுராஜன் ஆலோசனையின் பேரில் ஆகாச சாஸ்தா கோவில் உச்சிப் பகுதியில் அமைந்துள்ள வேப்பமரத்தில் யாருக்கும் தெரியாமல் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு திருடர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று மதியம் ஆளில்லாத நேரத்தில் மர்ம நபர் ஒருவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கையில் சுத்தியலுடன் வழக்கமாக கோவிலில் இருந்த உண்டியலை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். உண்டியல் ஏற்கனவே வெல்டிங் செய்யப்பட்டு இருந்ததால் அவரால் உடைக்க முடியாமல் போனதோடு, முழு உழைப்புடன் கூடிய முயற்சியும் வீணானதை தொடர்ந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றுள்ளார். இக்காட்சி சிசிடிவி யில் பதிவாகியதை தொடர்ந்து போலீசார் விசாரணை செய்ததில் அதே ஊரைச் சேர்ந்த பால்ராஜ்(52) என்ற பெயிண்டர் உண்டியலை பெயர்த்து எடுத்து திருட முயற்சித்தது தெரிய வந்தது இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஏற்கனவே இக்கோவிலில் 11 முறை பணம் திருடு போன நிலையில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு தான் சிசிடிவி அமைத்து கண்காணிக்கப்பட்டு  பெயிண்டர் பால்ராஜ் சிசிடிவி இருப்பது தெரியாமல் மாட்டிக்கொண்டு திருதிருவென முழித்து போலீசிடம் சிக்கிக்கொண்ட சம்பவம் மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது

 

Tags :

Share via