மறைந்த தலைவர்களின் சிலைகளை துணி கொண்டு மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.

by Admin / 18-03-2026 12:48:01am
 மறைந்த தலைவர்களின் சிலைகளை துணி கொண்டு மறைக்க வேண்டிய அவசியம் இல்லை.

தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக மறைந்த தலைவர்களின் சிலைகளை துணி கொண்டு மறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் அளித்த புகாரை தொடர்ந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். காமராஜர், அண்ணா, எம்ஜிஆர் ,கருணாநிதி, ஜெயலலிதா போன்ற மறைந்த தலைவர்களின் சிலைகளை திறந்த நிலையிலே வைத்திருக்கலாம் என்றும் தற்போது அரசியலில் இருக்கும் தலைவர்களின் புகைப்படங்கள் அல்லது உருவங்கள் அரசு அலுவலகங்கள் அல்லது பொதுவெளிகளில் இருந்தால் அவற்றை உடனடியாக மறைக்க வேண்டும் என்றும் தேர்தல் நேரத்தில் தேவையற்ற குழப்பங்களை தவிர்க்கவும் மறைந்த தலைவர்கள் அனைத்து தரப்பினராலும் மதிக்கப்படுவதாலும் இந்த இந்த விலக்கு  அளித்து உத்தரவு.

 

Tags :

Share via