பிளீச்சிங் பவுடர் உட்கொண்ட செங்கோட்டை சிறுமி குணமடைந்தார்.முதல்வர் நிதி உதவி

by Editor / 03-12-2021 01:54:54pm
பிளீச்சிங் பவுடர் உட்கொண்ட செங்கோட்டை சிறுமி குணமடைந்தார்.முதல்வர் நிதி உதவி

தென்காசி மாவட்டம் செங்கோட்டை, மேலூர்  பகுதியில் வசித்து வருபவர் கட்டுமானத் தொழிலாளி சீத்தாராஜ். அவரின் மனைவி பிரேமா. இவர்களுக்கு தனலட்சுமி (11), இசக்கியமாள் (5) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். இருவரும் அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார்கள்.

கடந்த மார்ச் 16-ம் தேதி பெற்றோர் வீட்டில் இல்லாத நேரத்தில், ஐந்து வயதுச் சிறுமியான இசக்கியம்மாள் வீட்டில் இருந்த பிளீச்சிங் பவுடரை தின்பண்டம் என நினைத்துச் சாப்பிட்டு விட்டார். இது குறித்துப் பெற்றோருக்கு எதுவும் தெரியாததால் அவர்கள் எந்த மருத்துவ சிகிச்சையும் எடுக்கவில்லை.


பிளீச்சிங் பவுடர் உட்கொண்ட சிறுமி இசக்கியம்மாள், அடுத்த சில நாள்களுக்குப் பின்னர் சாப்பிட முடியாமலும் தண்ணீர் குடிக்க முடியாமலும் சிரமப்பட்டுள்ளார். அதற்கான காரணம் தெரியாத பெற்றோர் நாட்டு மருந்துகளைக் கொடுத்துச் சரிப்படுத்த முயன்றுள்ளனர். ஒரு கட்டத்தில் தண்ணீர்கூட குடிக்க முடியாமல் போனதால், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களின் உதவியுடன் தென்காசி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக குழந்தையை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனாலும் இசக்கியம்மாளுக்கு குணம் ஏற்படவில்லை. உணவு எடுத்துக் கொள்ளாததால் உடல் மெலிந்து காணப்பட்டார்.இன்றய நிலையில் இந்த சிறுமையை ஜூலை மாதம் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

இச்சிறுமி குறித்த செய்திகள் தொலைக்காட்சிகளில் வெளியானதைத்தொடர்ந்து இவரை தகவல் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கவனத்துக்குச் சென்றது.அவரது ஆலோசனைப்படி  தென்காசி மாவட்ட ஆட்சியரைத் தொடர்புகொண்டு அந்தச் சிறுமியை சென்னையில் உள்ள எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு தனி ஆம்புலன்ஸ் வாகனம் மூலம்  கொண்டு செல்லப்பட்டார். 

அங்கு சிலநாட்கள் பரிசோதனைகள் செய்யப்பட்டு அமைச்சரின் ஏற்பாட்டில் அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார்.மேலும் சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட. சிறுமியை மருத்துவமனைக்குச் சென்று நேரில் பார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், இரு வாரங்களாக அங்கு தங்கியிருக்கும் சீத்தாராஜ் குடும்பத்தினரின் ஏழ்மையை கவனத்தில் கொண்டு, தனக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்ற விடுதியில் உள்ள அறையில் இவர்களைத் தங்கிக்கொள்ள அனுமதித்து உணவுப்பொருட்களை தட்டுப்பாடின்றி கிடைக்கவும் செய்தார்.

அங்கேயே தங்கி 5 மாதங்களாக சிகிச்சையை மேற்கொண்ட நிலையில் ஆபரேஷன் உள்ளிட்டவைகள் முடிந்து தற்போது குழந்தை குணமடைந்து நல்ல முறையில் மருத்துவமனையில் இருந்து திரும்பியுள்ளனர். பல்வேறுகட்ட உயரிய அறுவை சிகிச்சைகளை சிறுமிக்கு அளித்து அவரை காப்பாற்ற
முழுமுயற்சிகளை மேற்கொண்ட தமிழக முதல்வரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சுப்ரமணியன்,சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,வடக்குமாவட்ட செயலாளர் செல்லத்துரை  ஆகியோர் உடனிருந்தனர்.


 

 

Tags :

Share via