புழல் சிறையில் பெண் கைதி தூக்குப்போட்டு தற்கொலை

by Staff / 22-10-2023 11:56:49am
புழல் சிறையில் பெண் கைதி தூக்குப்போட்டு தற்கொலை

நகை திருட்டு வழக்கில் கைதாகி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காந்திமதி (50) என்ற பெண் கைதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதையடுத்து, சிறைக் காவலர்கள் உடலை மீட்டு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இலவச சட்ட உதவி மையம் மூலம் ஜாமின் கிடைத்தும் உறவினர்கள் யாரும் உறுதி பத்திரம் எழுதி தர வராததால், மனமுடைந்த காந்திமதி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. பெண் கைதி தற்கொலை குறித்து புழல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி ஜீயர்புரத்தில் மூதாட்டியை கொன்று நகையை கொள்ளையடித்த வழக்கில் காந்திமதி கைது செய்யப்பட்டிருந்தார்.

 

Tags :

Share via
Logo