வெளிமாநில மதுப்பாட்டில் விற்பனை களத்தில் இறங்கி பறிமுதல் செய்த மாவட்ட எஸ்பி.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் கஞ்சா குட்கா மற்றும் வெளிமாநில மது பாட்டில்கள் விற்பனையில் ஈடுபடும் நபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே நாடாஙகுடி என்கிற கிராமத்தில் சட்ட விரோதமாக வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தி வரப்பட்டு விற்பனை நடைபெறுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அப்பகுதிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று சோதனை மேற்கொண்டார். இந்த சோதனையின் போது நாடாகுடி பகுதியைச் சேர்ந்த சுந்தர் என்பவர் வீட்டை சோதனை செய்த போது வீட்டின் முன் பக்கத்தில் உள்ள குப்பையில் பதுக்கி வைக்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட வெளி மாநில பாண்டிச்சேரி மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.இதனையடுத்து சுந்தர் கைது செய்யப்பட்டார்.
தொடர்ந்து அதே பகுதியை சேர்ந்த உலகநாதன் என்பவர் வீட்டின் கொள்ளை பக்கம் போலீசார் சோதனை மேற்கொண்ட பொழுது வைக்கோல் படப்பு மூங்கில் காடு ஆகியவற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட வெளிமாநில மது பாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த உலகநாதன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கடந்த பிப்ரவரி மாதம் இதே போன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் சோதனை மேற்கொண்ட போது இந்த இரண்டு வீட்டிலும் 500க்கும் மேற்பட்ட வெளிமாநில சாராய பாட்டில்களை பறிமுதல் செய்து இருவரை கைது செய்து சிறையில் அடைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags : வெளிமாநில மதுப்பாட்டில் விற்பனை களத்தில் இறங்கி பறிமுதல் செய்த மாவட்ட எஸ்பி.