தமிழ்நாட்டுடன் எனக்கு உள்ளது குடும்ப உறவு.. ராகுல்

by Staff / 12-04-2024 05:13:29pm
தமிழ்நாட்டுடன் எனக்கு உள்ளது குடும்ப உறவு.. ராகுல்

எனக்கும் என் குடும்பத்திற்கும் அதிகமான அன்பை தமிழ்நாடு தருகிறது. தமிழ்நாட்டு மக்களிடம் நான் கொண்டுள்ள உறவு அரசியல் இல்லை அது குடும்ப உறவு. அதனால் தான் டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழ்நாட்டு விவசாயிகள் போராடிய போது நான் வருத்தப்பட்டேன். இந்தியாவில் இருக்கிற எல்லா கலாச்சாரங்களும், பண்பாடுகளும் மிகப் புனிதமானவை என்று நாம் கருதுகிறோம். ஆனால் அவர்களோ (பிஜேபி) ‘ஒரே நாடு, ஒரே தலைவர், ஒரே மொழி’ என்பதிலே குறிக்கோளாக இருக்கிறார்கள் என நெல்லையில் நடைபெற்றுவரும் பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி எம்.பி பேசியுள்ளார்.

 

Tags :

Share via