“சட்டம் ஒழுங்கை காப்பாத்துங்க” - ஜெகன் மோகன் கடிதம்

by Staff / 06-06-2024 05:22:45pm
“சட்டம் ஒழுங்கை காப்பாத்துங்க” - ஜெகன் மோகன் கடிதம்

தெலுங்கு தேசம் கட்சியினர் அராஜக செயல்களில் ஈடுபட்டு வருவதாக ஆளுநருக்கு காபந்து முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதியிருக்கிறார். தெலுங்கு தேசம் கட்சியினர் மாநிலம் முழுவதும் வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருவதால், அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. இது குறித்து ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ள ஜெகன்மோகன், ஆட்சி அமைக்கும் முன்பே தெலுங்கு தேசம் கட்சியினர் அராஜகத்தில் ஈடுபடுகின்றனர். ஆளுநர் உடனடியாக சட்டம் ஒழுங்கு சீர்குலைகளை தடுத்து நிறுத்த வேண்டும்" என கோரிக்கை விடுத்துள்ளார்.

 

Tags :

Share via