மீண்டும் முதலமைச்சரை தி.மு.கவை சாடிய விஜய்

by Admin / 24-11-2025 01:05:38am
மீண்டும் முதலமைச்சரை தி.மு.கவை சாடிய விஜய்

தமிழக கட்சி கழகத்தின் கூட்டம் இன்று காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரத்தில் உள்ள ஜே பி ஆர் பொறியியல் கல்லூரி வளாக அரங்கத்தில் உள்ள நடந்தது.கடும் கட்டுப்பாடுகளுக்கு இடையில் 2000 பேர் பங்கேற்ற இந்த நிகழ்வில் விஜய் திமுக வையும் முதல்வரையும் கடுமையாக சாடினார் .. உங்களை என்ன நம்ம எல்லோரையும் பொய் சொல்லி நம்ப வச்சு ஓட்டு போட வைத்து ஏமாத்துனாங்களா என்றும் திமுக தம் தமிழக வெற்றிக் கழகத்திற்கு கொள்கை இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் திமுக கொள்ளையடிப்பது கொள்கையாக கொண்டுள்ளதாகவும் தனிப்பட்ட முறையில் எங்களுக்கும் அவங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை .எந்த வாய்க்க வரப்பு பிரச்சினையும் இல்லை என்றும் அப்படியே இருந்தாலும் அதை நாம் கண்டு கொள்ளவில்லை. அவங்களுக்கு நம்ம மேல தனிப்பட்ட முறையில் வன்மம் இருக்கலாமே தவிர நாம் அந்த மாதிரி இல்லை என்றும் ஆனால் உங்களை என்ன நம்ம எல்லாரையும் பொய் சொல்லி நம்ப வச்சு ஓட்டு போட வைத்து ஏமாத்தினாங்க இல்ல .அப்படி ஏமாற்றி ஆட்சிக்கு வந்து நல்லது செய்கிற மாதிரி ஏமாற்றி நடிக்கிறாங்களா ...நாடகம் ஆடுகிறார்கள் .நாம் எப்படி கேள்வி கேட்காமல் இருக்க முடியும். அதனால நாம அவங்கள கேள்வி கேட்காம விட போறது இல்ல. இதையே நான் காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து சொல்றேன்னா தெரிஞ்சோ தெரியாமலோ இந்த மாவட்டத்துல நமக்கும் இந்த மாவட்டத்துக்கு ஆட்டோமேட்டிக்கா ஒரு கனெக்சன் ஏற்படுது. ஏன்னா, நம்ம முதல் பயணத்தை தொடங்குனது பரந்தூரிலிருந்துதான் . அந்த மண்ணுல நின்னு அந்த மக்களுக்காக கேள்வி கேட்டது விஜய் .அண்ணா அவர்கள் பிறந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்னைக்கு ஒரு பெரிய மன வேதனைக்கு அப்புறம் ,இந்த மக்களை சந்திப்பு நிகழ்ச்சி வந்திருக்கிறது., அதே அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மாவட்டம் .அதனால, நமக்கு எல்லாமே  கொடுத்த மக்களுக்கு எல்லா நன்மையும் நம்ம செய்யணும் .அதுவும் சட்டபூர்வமாக செய்யணும் .அங்கீகாரத்தோடு சேர்ந்து அதிகாரப்பூர்வமாக செய்யணும். ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் செய்யணும். ஒரே மாதிரி செய்யணும். ஒரே எண்ணத்தோடு செய்யணும். அந்த ஒரே நம்பிக்கையிலதான் நாம் அரசியலுக்கு வந்திருக்கிறோம். அதனால் தான் மக்களிடம் செல் அப்படி என்று சொன்னால், அவர்கள் சொன்ன மாதிரி நம்ம மக்கள் நோக்கி சொல்றோம். ஆனா, மக்களிடம் செல்ல சொன்ன அண்ணாவை மறந்தது யாரு.. கொள்கையா ,அது என்னப்பா கிலோ .என்ன விலை கேட்கிற அளவுக்கு அப்படி ஒரு கட்சி நடத்திக்கிட்டு இந்த கட்சியினுடைய தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் சொல்றாரு.. நமக்கு கொள்கை இல்லைன்னு எப்படி நமக்கு கொள்கை இல்லையா.. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் உள்ள ஒரு அடிப்படை கோட்பாட்ட நம்முடைய கட்சியினுடைய ஒரு முக்கிய கோட்பாட்டு அறிவித்த நமக்கு கொள்கை இல்லையா.... எல்லாருக்கும் எல்லாமே கிடைக்கணும் .சமூக நீதி கிடைக்கல. அந்த சமூகநீதி உண்மை  சமூக நீதியா இருக்கணும்.. சாதி  கணக்கெடுத்து நடக்கணும்..வக்பு சட்டத்தை எதிர்த்து உச்சநீதி முதலிலேயே போன நமக்கு கொள்கை இல்லையா..... சமத்துவம் சம வாய்ப்புன்னு சொன்ன நமக்கு  கொள்கை இல்லையா... இப்படி  வெறும் பேச்சில் மட்டும் பேசிக்கிட்டு எல்லா கொள்கை இவங்களுடைய கொள்கையே கொள்ளை தானே கொள்கையே தலால் தானே  கட்சியை சங்கரமடமான்னு சொன்னது ..எதற்காக சொன்னார்கள். நீ பாசாங்கு காட்டாத பாப்பா நீ நல்லவர்கள் போல் நடிக்காதேபாப்பாஎன்றும்

: த வெ கவினர் தற்குறி அல்ல. ஆச்சரியக்குறி என்றும் பாலாறு மணல் கொள்ளையின் மூலம் 4.730 கோடி கொள்ளையடித்ததாகவும் ஏண்டா இந்த விஜயை தொட்டோம் விஜயோட கூட இருக்கிறவங்களை தொட்டோம் .. நினைச்சு நினைச்சு பீல் பண்ண வேண்டிய நிலை வரும் என்றும் வீட்டுக்கு ஒருவருக்கு மோட்டார் சைக்கிள் கொடுப்பதாகவும் நிரந்தரமாக வீடும் லட்சியமாக காரும் வருமானமும் தரக்கூடிய நிலை வரும் என்றும் வாக்குறுதிகளாக போகிற போக்கில் சொல்லிச் சென்றார்.. முதலமைச்சரை மை டியர் அங்கள் என்றும் மை டியர் சார் என்றும் விழித்துக் கூப்பிட்டார். கரூர் சம்பவத்திற்கு பிறகு மீண்டும் முதலமைச்சரை திமுகவை சாடி உள்ளார்..

 

மீண்டும் முதலமைச்சரை தி.மு.கவை சாடிய விஜய்
 

Tags :

Share via