சிறார்கள் கார் அல்லது இருசக்கர வாகனங்களை ஓட்டினால்.. வாகன உரிமையாளருக்கு.25,000 வரை அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் வரை சிறை
18 வயது முழுமை அடையாத சிறார்கள் கார் அல்லது இருசக்கர வாகனங்களை ஓட்டினால் மத்திய மோட்டார் வாகன சட்டத்தின் படி வாகன உரிமையாளருக்கு 25,000 வரை அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும். சிறார்கள் ஓட்டிய அந்த வாகனத்தின் பதிவு சான்றிதழ் 12 மாதங்களுக்கு ரத்து செய்யப்படும். விதியை மீறி வாகனம் ஓட்டிய சிறார்களுக்கு அவர்கள் 25 வயது அடையும் வரை இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட மாட்டாது. சிறார்கள் வாகனங்களை ஓட்டி விபத்து ஏற்படுத்தினால், அந்த வாகனத்திற்கு முறையான இன்சூரன்ஸ் இருந்தாலும் கூட எவ்வித இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்படாது என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tags :



















