திமுக கூட்டணியில் பாமக?.. ராமதாஸை சந்தித்த செல்வப்பெருந்தகை

by Editor / 27-06-2025 01:48:02pm
திமுக கூட்டணியில் பாமக?.. ராமதாஸை சந்தித்த செல்வப்பெருந்தகை

விழுப்புரம்: தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சந்தித்துள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ராமதாஸை சந்தித்து அவரது உடல்நலம் குறித்து விசாரித்தேன். கூட்டணி குறித்து ராமதாஸுடன் பேசவில்லை. திமுக கூட்டணியில் பாமக இணையுமா என்பதை திமுகதான் முடிவு எடுக்கும். பாமக யாருடன் எல்லாம் கூட்டணி வைக்கிறதோ அந்த கட்சியை பாஜக உடைத்து வருகிறது. பாமகவில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கும் பாஜகதான் காரணம்” என்றார்.
 

 

Tags :

Share via