இன்று திமுக கூட்டணி கட்சிகளின் போராட்டம்

by Admin / 15-03-2026 12:41:14am
இன்று திமுக கூட்டணி கட்சிகளின் போராட்டம்

இன்று தமிழகம் முழுவதும் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சனைகளை முன்வைத்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில்  காலை 10:30 மணி அளவில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும்  போராட்டம் நடைபெறுகிறது. மத்திய அரசின் தவறான வெளியுறவுக்கொள்கை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வீட்டு உபயோக மற்றும் வணிக ரீதியிலான எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை கண்டித்தும் தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி, 100 நாள் வேலை திட்ட நிதி மற்றும் குடிநீர் இணைப்பு நிதி போன்றவற்றை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பதை எதிர்த்தும் கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள், ஓசூர் விமான நிலையம் போன்ற வளர்ச்சி திட்டங்களுக்கு அனுமதி வழங்காமல் முட்டுக்கட்டை போடுவதை கண்டித்தும் கீழடி அகழாய்வு முடிவுகளை ஏற்க மறுப்பதும் மும்மொழி கொள்கை திணிப்பு போன்றவைகளும் இப்போராட்டத்தில் முன்வைக்கப்பட உள்ளன. போராட்டத்தில் திமுக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர் மற்றும் கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் ,கம்யூனிஸ்ட் கட்சிகள் ,விசிக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

 

Tags :

Share via

More stories