எனக்கு என்றைக்குமே அரசியலில் தலைவர் இவர் மட்டுமே
மாமல்லபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் நெப்போலியன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நான் நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருந்த 2001 காலகட்டத்தில், வேலை கேட்டு வந்த இளைஞர்களின் நலனுக்காக முதலில் ஒரு நிறுவனமாக தொடங்கினேன். படிப்படியாக சாப்ட்வேர் நிறுவனமாக வளர்ந்துள்ளது.
சென்னை, அமெரிக்கா என இரண்டு இடங்களில் இயங்கும் இந்த நிறுவனம் விரைவில் திருச்சி, திருநெல்வேலி பகுதியிலும் தொடங்கப்படும். திமுகவில் கருணாநிதி எனக்கு குரு. அவரது ஆசியுடன் திமுக காரனாகவே இருப்பேன். அரசியலுக்கு மீண்டும் வர விருப்பம் இல்லை. அமரிக்காவில் எனது மகனை கவனிக்கும் பொறுப்பில் நானும் எனது மனைவியும் இருப்பதால் அதற்கே நேரம் சரியாக உள்ளது. அங்கு விவசாயமும் செய்து வருவதால் மகிழ்ச்சியாக வாழ்கிறேன்.
Tags :