நீட் மறு நுழைவுத் தேர்வு ஜூன் 21 அன்று நடைபெற உள்ள நிலையில்,டெலிகிராம் செயலிக்கு தடை.
இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் மறு நுழைவுத் தேர்வு ஜூன் 21 அன்று நடைபெற உள்ள நிலையில் இந்தியாவில் டெலிகிராம் செயலிக்கு தடை விதித்துள்ளது மத்திய அரசு. தேசிய தேர்வு முகமையின் பரிந்துரையின் பேரில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. கடந்த மே மூன்றாம் தேதி நடந்த நீட் தேர்வின் போது டெலிகிராம் குழுக்கள் மூலம் வினாத்தாள்கள் கசிந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் மறு தேர்வுக்கு சில மோசடி கும்பல்கள் போலியான வினாத்தாள்களை விற்பனை செய்யக்கூடும் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக தேர்வுக்கு பிறகு போலியான வினாத்தாள் கசிவு ஆதாரங்களை உருவாக்குவதை தடுக்கவும் ஏற்கனவே பதிவிட்ட மெசேஜ்களை எடிட் செய்து மோசடி செய்வதை தவிர்க்கவும் ஜூன் 30 வரை மெசேஜ் எடிட்டிங் வசதியும் முடக்கப்பட்டுள்ளது. தேர்வு முறையில் முறைகேடுகள் நடப்பதை தடுக்கவே இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. முறைகேடான செயல்களில் ஈடுபடுவோர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால் சைபர் கிரைம் உதவி எண்ணாகிய 19 30 க்கு தகவல் தெரிவிக்கவும் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் புகார் அளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வினாத்தாள் கசிவதை தடுக்கும் பொருட்டு இந்திய ராணுவ படையின் ஹெலிகாப்டர் மூலமாக அந்தந்த தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்களை அனுப்பும் முறையை தேசிய தேர்வு முகமை மேற்கொண்டுள்ளது.
Tags :


















