பெங்களுருவில் இன்று நடக்கும் அதிசயம்: ‘நிழல் விழாத நாள்’

by Staff / 24-04-2024 01:14:34pm
பெங்களுருவில் இன்று நடக்கும் அதிசயம்: ‘நிழல் விழாத நாள்’

பெங்களூருவில் இன்று ‘ஜீரோ ஷேடோ டே’ என்று அழைக்கப்படும் ‘நிழல் விழாத நாள்’ வர இருக்கிறது. இந்த நிகழ்வு நண்பகல் 12:17 முதல் 12:23க்கு இடையில் நடைபெற இருக்கிறது. ஆண்டிற்கு இரண்டு முறை ஏப்ரல் 24 மற்றும் ஆகஸ்ட் 18 ஆகிய இரண்டு தினங்களில் பெங்களூருவில் சூரிய ஒளி நேராக மக்கள் தலையில் விழுவதால், பக்கவாட்டில் நிழல் விழுவதில்லை. இதே போல கன்னியாகுமரி, ஹைதராபாத், மும்பை போன்ற இடங்களிலும் வெவ்வேறு தினங்களில் இது போன்ற ‘நிழல் விழாத நாள்’ வருவது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories