பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிகாரபூர்வமாக இணைந்தார்,டிடிவி தினகரன்.
சென்னை வந்துள்ள பாஜகவின் தமிழக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஸ் கோயலை இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேரில் சந்தித்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிகாரபூர்வமாக இணைந்தார். அ. ம மு க உயர்மட்ட குழு கூட்டத்திற்கு பிறகு, தமிழகத்தில் ஜெயலலிதாவின் நல்லாட்சியை மீண்டும் கொண்டு வரவும் திமுகவை தோற்கடிக்கவும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக தினகரன் அறிவித்தார். பாஜக கூட்டணியில் அதிமுக இருக்கின்ற நிலையில், அ. ம. மு .க இணைய வாய்ப்பு உள்ளே என்கிற பேச்சு எழுந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்றைய சூழல் நிகழ்ந்துள்ளது. இது குறித்து தினகரன் தமிழ்நாட்டின் நலனுக்காகவும் ஒரு பெரிய நோக்கத்திற்காகவும் பழைய கசப்புகளை மறந்து சமரசம் செய்து கொள்வதில் தவறில்லை எனக் கூறியுள்ளார். ஜனவரி 23 அன்று செங்கல்பட்டு மதுராந்தகத்தில் நடைபெற உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் பொதுக்கூட்டத்தில் டி.டி.வி தினகரன் பங்கேற்பார்.
Tags :


















