திமுகவின் 12-வது மாநில மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்

by Admin / 10-03-2026 12:00:56am
 திமுகவின் 12-வது மாநில மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் சிறுகனூரில் இன்று திமுகவின் 12-வது மாநில மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மிகப்பிரமாண்டமாக நடைபெற்றது.  மாநாட்டுத் திடலில் அமைக்கப்பட்டிருந்த 110 அடி உயர பிரம்மாண்ட கொடிக்கம்பத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கழகக் கொடியினை ஏற்றி மாநாட்டை  அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.  ஸ்டாலின் தொடரட்டும்;  தமிழ்நாடு வெல்லட்டும்' என்ற முழக்கத்துடன் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தி இந்த மாநாடு நடத்தப்பட்டது .சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட  இந்த மாநாட்டுத் திடலில், சுமார் 10 லட்சம் தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் வசதிகள்  செய்யப்பட்டிருந்தன. ரேம்ப் வாக்'  மூலம்  தொண்டர்களிடையே  உற்சாகமாக  தனது உரையில்,,

யார் ,எந்த முகமூடி அணிந்து வந்தாலும், எத்தகைய மிரட்டல்களை விடுத்தாலும் தி.மு.க இருக்கும் வரை தமிழகத்திற்குள் பாஜக நுழைய முடியாதுஎன்று உறுதியாகத் தெரிவித்தார் . தான் சிறு குழந்தையாக இருந்தபோது திருச்சியில் நடந்த நிகழ்வுகள் மற்றும் தனது நீண்டகால அரசியல் பயணம் குறித்து பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டாரவரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி "சிக்சர்" அடித்து பிரம்மாண்ட வெற்றியைப் பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அதிமுக- பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி குறித்து விமர்சித்ததோடுஏழாவது முறையும் நாமதான்; இனி எப்போதும் நாமதா.திராவிட மாடலுக்கு ஆதரவாகத் தமிழ்நாடெங்கும் வீசும் அலையினை, திருச்சியில் அலைகடலெனத் திரண்ட உடன்பிறப்புகளின் திருமுகங்களில் கண்டேன்.நானும் எழுச்சி கொண்டேன்.அடிமைகளின் முதுகில் ஏறி வந்தாலும், புதிதாய் அடிமைகளைச் சேர்க்க முனைந்தாலும், ஏவல் அமைப்புகளை வைத்து மிரட்ட நினைத்தாலும் பாசிச பா.ஜ.க.வால் நம்மை அசைத்துக்கூட பார்க்க முடியாது.வீடுவீடாகச் செல்வோம்; நம் சாதனைத் திட்டங்களைச் சொல்வோம்.தமிழ்நாடா..என்.டி.ஏ வா எனும் நம் மண்ணைக் காக்கும் போரில் உறுதியாக  வெல்வோம்.
அதிமுக தொண்டர்கள் மீது தனக்கு வருத்தம் இருப்பதாக குறிப்பிட்டார்.மாநாட்டுப் பணிகளைச் சிறப்பாக மேற்கொண்ட அமைச்சர் கே.என்.நேருவை மாநாடு என்றால் நேரு, நேரு என்றால் மாநாடு என முதலமைச்சர் வெகுவாகப் பாராட்டினார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.  2026 தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் பிரச்சாரத் தொடக்கமாகவும் பார்க்கப்படுகிறது.

 திமுகவின் 12-வது மாநில மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்
 

Tags :

Share via