இன்று ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான திரண்டனர்.

by Editor / 16-08-2023 11:09:11am
இன்று ஆடி அமாவாசை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான திரண்டனர்.

இந்துக்களின் புனிதமான தினங்களில் ஆடி அமாவாசை முக்கிய பங்கு வகிக்கிறது. இறந்தவர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு தை அமாவாசை ஆடி அமாவாசை இந்த இரண்டும் ஆண்டுக்கு இருமுறை கட்டாயமாக நடக்கும் சடங்குகள் ஆகும் இந்த நாட்களில் முன்னோர்களுக்கும் தந்தையே இழந்தவர்களுக்கும் கணவனை இழந்தவர்களும் தாய் தந்தை இழந்தவர்களும் புனித ஸ்தலங்களில் தர்ப்பணம் கொடுப்பது வழக்கமாக இருந்து வருகின்றது தமிழகத்தில் புண்ணிய ஸ்தலமாக விளங்கும் சிவாலயம் நிறைந்த குற்றாலம் பேரருவியில் ஆண்டுதோறும் தை மற்றும் ஆடி அமாவாசை தினத்தன்று ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து செல்வது வழக்கமாக இருந்து வருகின்றது இதன் தொடர்ச்சியாக இன்று ஆடி அமாவாசை தினம் என்பதால் குற்றாலம் பேரருவியில் தண்ணீர் வரத்து மிக குறைவாக இருந்தாலும் ஏராளமான பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்கு நீண்ட வரிசை நின்று குளித்து அங்கு கூடியிருக்கும் வேத விற்பனர்களிடம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர் மேலும் திருச்செந்தூர்,கன்னியாகுமரி,பாபநாசம்,ராமேஸ்வரம்,திருச்சி காவிரிக்கரை,தாமிரபரணி நதிக்கரைகளில்  உள்ளிட்ட புண்ணியஸ்தலங்களில்   அதிக அளவில் கூட்டம் இருந்து வருகிறது இன்று மாலை 3.35 மணி வரை அமாவாசை இருப்பதால் ஏராளமானவர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து மற்றும் நீர் நிலைகளிலும் தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

 

Tags : ஆடி அமாவாசை

Share via