உக்ரைன் நகரங்கள் மீதான- ஒரு வாரத்திற்கு போரை நிறுத்தபுடின் ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

by Admin / 30-01-2026 09:50:37am
 உக்ரைன் நகரங்கள் மீதான- ஒரு வாரத்திற்கு போரை நிறுத்தபுடின் ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

கடுமையான குளிர்காலம்  காரணமாக விளாடிமிர் புடின் உக்ரைன் நகரங்கள் மீதான தாக்குதல்களை ஒரு வாரத்திற்கு போரை நிறுத்த ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேசிய அதிபர் ட்ரம் 24 டிகிரி செல்சியஸ் வரையிலான அதிக குளிரை கருத்தில் கொண்டு ஒரு வார காலத்திற்கு தாக்குதல்களை நிறுத்துமாறு குடிநீதம் தனிப்பட்ட முறையில் கோரிக்கை விடுத்ததாகவும் அதற்கு அவர் சம்மதித்ததாகவும் தெரிவித்தார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளார் .இது உக்கரனின் எரிசக்தி கட்டமைப்புகளை பாதுகாக்கவும் தற்காலிக நிம்மதி கிடைக்கவும் உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார் .அதிபர் ட்ரம்பின் இந்த அறிவிப்பு குறித்து கிர இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த உறுதிப்படுத்துதலையும் தெரிவிக்கவில்லை. உக்ரைனின் எரிசக்தி நிலையங்கள் மீதான ரசியாவின் தொடர் தாக்குதல்களால் லட்சக்கணக்கான மக்கள் வெப்பம் மற்றும் மின்சாரம் இன்றி தவிக்கும் நிலையில் இந்த மனிதாபமான அடிப்படையிலான போர் நிறுத்தம் கோரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories