ஆன்லைன் மோசடி ஈடுபட்டஒரே குடும்பத்தைச் சேர்ந்த -மாபியா குழுவினர் 11 பேருக்கு நேற்று சீனா மரண தண்டனையை நிறைவேற்றி உள்ளது.
மியான்மரை தளமாகக் கொண்டு ஆன்லைன் மோசடி ஈடுபட்டஒரே குடும்பத்தைச் சேர்ந்த -மாபியா குழுவினர் 11 பேருக்கு நேற்று சீனா மரண தண்டனையை நிறைவேற்றி உள்ளது. இக்குழுவினர் மியான்மரில் வடக்கு எல்லை பகுதியான கோஹாங்கில் க் ரூச்சிங் டைகர் வில்லா போன்ற மையங்களை நடத்தி அங்கிருந்து ஆன்லைன் மோசடி சூதாட்டம் ஆள் கடத்தல் மற்றும் கொலையை போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டனர் இவர்களது மோசடியால் சுமார் 14 சீன குடிமக்கள் உயிரிழந்ததாகவும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சட்ட விரோத பணம் பரிமாற்றம் நடந்ததாகவும் சீன நீதிமன்றம் தெரிவித்தது செப்டம்பர் 2025 இல் இவர்களுக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை சீன உச்சநீதிமன்றம் உறுதி செய்ததை அடுத்து வென் ஜோ நீதிமன்றம் இவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றியது.. மியான்மரில் 2023ல் ராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நடந்த மோதலின் போது இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் பிடிக்கப்பட்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. சீன அரசு எல்லையோர் ஆன்லைன் மோசடிகளை கட்டுப்படுத்த எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகின்றது.
Tags :


















