இன்று உள்துறை அமைச்சர் பழனிசாமி சந்திப்பதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றுள்ளாா்.

by Admin / 19-03-2026 10:51:23am
இன்று உள்துறை அமைச்சர் பழனிசாமி சந்திப்பதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றுள்ளாா்.

இன்று டெல்லி சென்று உள்துறை அமைச்சர் பழனிசாமி சந்திப்பதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமான நிலையத்திற்கு வந்தார். அடுத்த மாதம் 23ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் என். டி. ஏ.கூட்டணியில் தமிழ்நாட்டில் தலைமை வகிக்கும் அ.தி.மு.க  தொகுதிபங்கீட்டை   இறுதி செய்வதற்காக அமித்ஷாவை சந்திக்க சென்று உள்ளார். 2021 அதிமுக சார்பாக பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அவற்றில் நான்கு தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பாக 25 க்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்டு தொகுதிகளின் விவரங்களையும் அளித்துள்ளதாக தகவல். பாஜகவோட தொகுதி இறுதி செய்யப்பட்டால்,  அடுத்து பாமக ,அமுமுக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என தெரிகிறது.

 

Tags :

Share via