சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஜெம் வீரமணி மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெம் கிரானைட் உரிமையாளர் வீரமணி அவரது உதவியாளர் சாந்தி அவர் கணவர் மகேந்திர சிம்ஹன் ஆகிய மூவர் மீது சென்னை காவல் ஆணையர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. ஆகஸ்ட் மாதம் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரால் மூவரும் கைது செய்யப்பட்டனர். சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக வீரமணியும் அவருக்கு உடந்தையாக இருந்த சாந்தி மற்றும் அவரது கணவர் ஆகியோர் மீதும் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இவர் மீது இதுவரைபல சிறுமிகள் புகார் அளித்ததை தொடர்ந்து ஜாமினில் வெளிவர முடியாத குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின்படி காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
Tags :


















