காது வலிக்கு சிகிச்சை பெற்ற மாணவி திடீர் பலி

by Staff / 18-02-2023 12:15:58pm
காது வலிக்கு சிகிச்சை பெற்ற மாணவி திடீர் பலி

சென்னை ராயபுரத்தில் தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு  படித்து வந்தவர் அபிநயா. இவருக்கு அடிக்கடி காது வலி இருந்துள்ளது. இதற்காக திருவொற்றியூரில் தனியார் மருத்துவமனைக்கு அபிநயாவை அவரது தாயார் அழைத்துச் சென்றார். கடந்த 14ஆம் தேதி அபிநயாவுக்கு காதில் அறுவை சிகிச்சை செய்தனர். சிகிச்சை முடிந்து அரை மணி நேரத்தில் அபிநயா நெஞ்சு வலிப்பதாக தாயிடம் கூறினார். உடனடியாக மருத்துவர்கள் பரிசோதித்தபோது, மூச்சுத் திணறல் அதிகமானதால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மாணவி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

 

Tags :

Share via

More stories