மதுரை அவனியா புரத்தில் ஜல்லிக்கட்டு
உலக புகழ் பெற்ற தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுப்போட்டி மூனறு சுற்று நடைபெற்று வருகிறது.கடந்த ஆண்டு வெற்றிபெற்ற கார்த்தி 12 மாடுகளைப்பிடித்து முன்னணியில் உள்ளார்.உடல் தகுதி பெற்ற வீர இளைஞர்கள் தங்கள் தினவெடுத்த தோளுடன் திமில் பெருத்து கூரிய கொம்புடன் தொடர்ந்து மாடுகள் வாடிவாசல்வழி சீறி வருகின்றனர்.வெற்றி பெற்ற வீரர்களுக்கும் மாடுகளுக்கும் பரிசு வழங்கி உற்சாகப்படுத்தி வருகிறார்கள்.
கொல்லெறிந்து கோடு அஞ்சுவானை மறுமையிலும் புல்லாளை ஆயர் மகள் என திருமணத்தில் முதல் தகுதியாக மாட்டை அடக்கி மங்கையை கைப்பிடிக்கும் நடைமுறை வழக்கம் ஆடுமாடு வளர்த்து வாழ்ந்த முல்லை நில ஆயர் குல சமூக வழக்காக இருந்தது .மாட்டை அடக்காதவன் கோழையாகவே பார்க்கப்பட்டான் .அப்படிப்பட்ட தமிழர்களின் சிறப்பிற்குரியஜல்லிக்கட்டு.... வெற்றி பெறும் வீரற்கு கார் பரிசாக வழங்கப்படவுள்ளது ....
Tags :