அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில்  10 பேர் காயம்.6 பேர் பலத்த காயம்  தீவிர சிகிச்சை.

by Editor / 15-01-2023 10:36:14am
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில்  10 பேர் காயம்.6 பேர் பலத்த காயம்  தீவிர சிகிச்சை.

மதுரை : அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை துவங்கி வெகுவிமர்சையாக
நடைபெற்று வருகிறது. வாடிவாசல் வழியாக சீறிவரும் காளைகளை தீரத்துடன் மாடுபிடி வீரர்கள் அடக்கி வெற்றி பெற்று வருகின்றனர். காளைகளும் மாடுபிடி வீரர்களுக்கு சிக்காமல் நழுவி விளையாடி வருகின்றனர்.

தற்போது இப் போட்டியின் இரண்டாவது சுற்று முடிவடைந்த சூழலில் மாடு உரிமையாளர்களான பனையூரைச் சேர்ந்த ஆறுமுகம், தத்தனேரியைச் சேர்ந்த விஷ்னு,பெரியார் நகரைச் சேர்ந்த மலைச்சாமி, வினிக்குமார், சொரிக்காம்பட்டியைச்சேர்ந்த செல்லமுத்து, சோழவந்தானைச் சேர்ந்த பாலு, ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்தபழனிக்குமார், திருப்புவனத்தைச் சேர்ந்த கருப்புராஜா, சிந்தாமணியைச் சேர்ந்தராம்பிரபு என 9 பேரும், வளையங்குளத்தைச் சேர்ந்த முருகன் என்ற மாடுபிடி வீரர்
என 10 காயமடைந்தனர்.


இதில் ஆறுமுகம், விஷ்னு, ராம்பிரபு, முருகன் என்ற நான்கு பேருக்கு அவனியாபுரம்அரசு பள்ளியில் உள்ள முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo