3 மாதத்தில் 50 இலட்சம் கணக்குகளை தடை செய்த வாட்ஸ் அப் நிறுவனம்.

by Editor / 02-07-2022 08:44:22am
3 மாதத்தில் 50 இலட்சம் கணக்குகளை தடை செய்த வாட்ஸ் அப் நிறுவனம்.

வாட்ஸ்அப் நிறுவனம் நாளுக்குநாள் பல்வேறு மாற்றங்களை கொண்டுவந்து தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது.அதே சமயம் தனது நிறுவனத்தின் கொள்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் விதிவிலக்காக இருக்கும் பயனாளர்களை நீக்கம் செய்வதிலும் அதிகளவில் முனைப்பு காட்டிவருகிறது.இதன் தொடர்ச்சியாக கடந்த மே மாதம் மட்டும் வாட்ஸ்அப் நிறுவனம் 19 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்களின் கணக்குகளை தடை செய்துள்ளது. குறைகளை நிவர்த்தி செய்யும் அமைப்பு வழியாகவும், வரம்பு மீறல்களைத் தடுக்க மற்றும் கண்டறிவதற்கான அதன் சொந்த தொழில்நுட்ப வசதி மூலமாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில், கணக்குகளை வாட்ஸ்அப் தடை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான முறையில் வாட்ஸ்அப்பை பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான சில நடவடிக்கைகளை அந்த நிறுவனம் எடுத்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 16 லட்சம் கணக்குகளையும், மார்ச் மாதம் 18.05 லட்சம் கணக்குளையும் வாட்ஸ்அப் தடை செய்தது. 528 புகார்கள் மே மாதத்தில் பெறப்பட்டன. அவற்றில் 303 புகார்கள் சம்பந்தப்பட்ட கணக்குகளை தடை செய்ய வேண்டும் என்பதாக இருந்தது. அனைத்து புகார்களை பரிசீலித்து நடவடிக்கை எடுத்தோம் என்று அரசுக்கு தாக்கல் செய்த அறிக்கையில் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. .

 

Tags : WhatsApp banned 50 lakh accounts in 3 months.

Share via