அதிகபாரம் ஏற்றி வந்த 15 கனரக வாகனங்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு
குமரி மாவட்டத்தில் பல வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறி விபத்தை ஏற்படும் வகையில் வாகனங்களில் அதிக பாரம் ஏற்றிச் செல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.விபத்துக்களை தடுக்கும் விதமாக அதிகபாரம் ஏற்றி வரும் கனரக வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து முழுவதும் மாவட்டம் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி அதிகபாரம் ஏற்றி வரும் வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்வதோடு அபராதமும் விதித்து வருகிறார்கள். அந்த வகையில் நேற்று நடைபெற்ற வாகன சோதனையில் அதிகபாரம் ஏற்றி வந்த 15 கனரக வாகனங்கள் மீது மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து பறிமுதல் செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட வாகனங்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.
Tags :


















.jpg)
