மொழி,ஜாதி பேதமில்லா   சுதந்திர தினம் ..

by Editor / 14-08-2021 05:52:29pm
மொழி,ஜாதி பேதமில்லா   சுதந்திர தினம் ..

 


1945 ஆகஸ்ட் 15 அன்று நமது தேசியக்கொடி செங்கோட்டையில் ஏற்றப்பட்டது.சுதந்திரதினம் ஏற்றத்தாழ்வு,மொழி,ஜாதி ,மதம் ,நிறம் என அனைத்து வேறுபாடுகளுமின்றி அனைவராலும் கொண்டாடப்படுகிறது.இத்தினத்தில் இந்திய தேசிய கொடியானது பாரத பிரதமர் செங்கோட்டையிலும், ஒவ்வொரு மாநில முதல்வர்கள் அவரவர் மாநிலத்திலும்,ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும்,அனைத்து பள்ளி கல்லூரிகளிலும் ஏற்ற படுகிறது.

செங்கோட்டையில் அனைத்து பாதுகாப்பு துறையினரும், அரசு துறையினரும் நமது பெருமைகளை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்கும் விதமாக சுதந்திர தின கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. குறிப்பாக இந்திய போர் விமானங்கள் நடத்தும் சாகசங்கள் உலகளவில் பேசப்படுகின்றன.இந்திய அரசு தனது சுதந்திர தினத்தை அரசு விழாவாக கொண்டாடுகிறது. முழு இந்தியாவிற்கும் இத்தினம் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டு ,குழந்தைகளுக்கும் பெரியோர்களுக்கு இனிப்பு வழங்கி தேசிய கீதம் உரக்க பாடப்பட்டு கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் சிறு சிறு கலை நிகழ்ச்சிகள் நடத்தி கொண்டாடப்படுகிறது.

சுதந்திர தினத்தன்று நாம் நன்றி தெரிவிக்க வேண்டியவர்களின் எண்ணிக்கை மிகப்பெரியதாகும், சுயநலமற்ற சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள், நாட்டுக்காக உயிர் நீத்த சுதந்திர போராட்ட வீரர்கள் என இந்த பட்டியல் மிகப்பெரியதாகும்.

 

Tags :

Share via