கோவில்பட்டியில் அனுமதியின்றி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 61 பேர் கைது..

by Admin / 21-10-2023 11:26:21pm
கோவில்பட்டியில் அனுமதியின்றி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 61 பேர் கைது..

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இல்லம் முன்பு பாஜக கொடி கம்பத்தை அகற்றியதை கண்டித்து -கோவில்பட்டியில் அனுமதியின்றி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 61 பேர் கைது..

சென்னை பனையூரில் உள்ள அண்ணாமலை இல்லம் முன்பு  நேற்று இரவு பாஜக  கொடிக்கம்பத்தை ஜே சி.பி இயந்திரம் கொண்டு வருவாய்த் துறையினர் மற்றும் காவல்துறையினர் அதிகாரிகள் கொடிக்கம்பத்தை அகற்றியதை கண்டித்து பாஜகவினர் தமிழக முழுவதும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜக தலைவர் வெங்கடேசன் சென்னை கேசவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது அப்போது திமுக அரசையும் காவல்துறையினரையும் கண்டித்து  கண்டன கோஷங்கள் எழுப்பினர்

இதனையடுத்து அனுமதியின்றி  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட  பாஜகவினர் 61 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பாஜகவினர் ஆர்பாட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு நிலவியது.

 

 

Tags :

Share via

More stories

Logo