இன்று 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

by Admin / 10-06-2026 11:58:04pm
இன்று 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

தமிழ்நாட்டில் இன்று 15மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  நீலகிரி ,கோயம்புத்தூர், ஈரோடு திருப்பத்தூர், வேலூர் ,கிருஷ்ணகிரி, தர்மபுரி , சேலம், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் மத்திய கடலோரப் பகுதிகளிலும் விழுப்புரம் , கள்ளக்குறிச்சி , கடலூர் மற்றும் மயிலாடுதுறை  .சென்னை ,திருவள்ளூர் ,காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மாலை நேரத்தில் அல்லது இரவு நேரங்களில் இடி மின்னலின் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via
Logo