கர்நாடகா காங்கிரஸ்  அமைச்சரவை விரிவாக்கத்தின் ஒரு பெண் அமைச்சர் கூட நியமிக்கப்படவில்லை .

by Admin / 03-08-2026 08:56:32pm
 கர்நாடகா காங்கிரஸ்  அமைச்சரவை விரிவாக்கத்தின் ஒரு பெண் அமைச்சர் கூட நியமிக்கப்படவில்லை .

இன்று கர்நாடகா அமைச்சரவை விரிவாக்கம் நடந்தது. முதலமைச்சர் டி. கே. சிவகுமார் தலைமையிலான காங்கிரஸ்  அமைச்சரவை விரிவாக்கத்தின் ஒரு பெண் அமைச்சர் கூட நியமிக்கப்படவில்லை என்பது கட்சியினர் இடையே அதிருப்தியை உருவாக்கி உள்ளது. 20 பேர் இறுதி பட்டியலில் இருந்த நிலையில் காயத்ரி சாந்தி கவுடா என்ற ஒரு பெண் எம்எல்ஏவும் அமைச்சராக நியமிப்பதாக இருந்த நிலையில், திடீரென்று அவர் நீக்கப்பட்டுள்ளார். பதவியேற்ற19 அமைச்சர்களுமே ஆண்கள் என்பதால் ஒரு பெண் அமைச்சர் கூட இல்லாத அமைச்சரவையாக மாறி உள்ளது டி.கே. சிவகுமார் அரசு. இதுகுறித்து பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் ஒருவரான மார்க்ரட் ஆல்வா இது ஏமாற்றம் அளிப்பதாகவும் சீதாராமையா அமைச்சரவையில் அமைச்சராக இருந்த லட்சுமி பால்கர் மற்றும் உமா ஸ்ரீ போன்ற முக்கிய தலைவர்களுக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று பலரும் விமர்சனத்தை முன்வைத்து வருகிறார்கள் .தேசிய அளவில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் மகளிர் உரிமைக்காக பேசும் காங்கிரஸ் கட்சி கர்நாடகாவில் பெண்களுக்கு அமைச்சரையில் இடம் தராதது எதிர் கட்சிகளின் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கர்நாடக மூத்த தலைவரான எச். கே. பாட்டில், தினேஷ் ,குண்டு ராவ் ,டி. பி. ஜே சந்திரா இண்டிசட்டமன்ற உறுப்பினர் எஸ்வந்தராய கவுடா பாட்டில் தம் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo