காவிரி நீரை உடனடியாக திறந்து விடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக புதிய மனு தாக்கல் .

by Admin / 03-08-2026 08:09:46pm
 காவிரி நீரை உடனடியாக திறந்து விடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக புதிய மனு தாக்கல் .

தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய காவிரி நீரை உடனடியாக திறந்து விடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பாக புதிய மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளது. கர்நாடக அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு சேர வேண்டிய காவிரி நீரை உடனடியாக விடுவிக்கும் பொருட்டு நடத்திய ஆலோசனைக்கு பிறகு முதலமைச்சர் விஜய்யின் ஆணைக்கிணங்க சட்ட பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளும் முகமாக இன்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காவிரி நீர் ஒழுங்காற்று முறை குழு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பத உத்தரவுகளின் படி கர்நாடகா தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும் கே ஆர் எஸ் மற்றும் கபினி அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக  தமிழகத்திற்கு 26 ஆயிரத்து 954 டிஎம்சி தண்ணீர் கிடைக்க வேண்டும் என்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தற்பொழுது 4,536 டிஎம்சி நீரை குறைவாக திறந்து விட்டதை சுட்டிக்காட்டியும் கர்நாடகாவில் நான்கு அணைகளிலும் மொத்தமாக 77 ஆயிரத்து 567 டி. எம் .சி நீர் இருப்பதாகவும் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதன் மூலம் கர்நாடகாவிற்கு எந்தவிதமான பாதிப்பு இல்லை என்றும் ஜூலை 30 அன்று நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் 15 நாட்களுக்கு வினாடிக்கு ,3500 கன அடி வீதம் நீர்தலக்க உத்தரவிடப்பட்டு கர்நாடகா அரசு அது சரியாக செயல்படுத்தவில்லை என்றும் தமிழக அரசு வாதங்களையும் முன் வைத்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo