கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனுக்கு போஸ்டர் அடித்த மனைவி
திருநெல்வேலியில் மாவட்டத்திலுள்ள நாங்குநேரி மதுபான கடையில் பார் ஊழியராக பணியாற்றி வந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி சுமித்ரா. இந்த தம்பதிக்கு 5 வயது மற்றும் மூன்று வயதுடைய இரண்டு மகள்கள் உள்ளனர். மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்த முத்துக்குமார், தினமும் மது அருந்திவிட்டு வீட்டிற்குள் அல்லது வீட்டிற்கு வெளியே உறங்குவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று காலை வீட்டு வாசலில் மர்மமான முறையில் முத்துக்குமார் உயிரிழந்து கிடந்துள்ளார். முகத்தில் லேசான காயம் இருந்ததால், தவறி விழுந்து அடிபட்டு உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்பட்ட நிலையில், அவரது மைத்துனர் ராஜேஷ் மற்றும் உறவினர்கள் முத்துக்குமாரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த நாங்குநேரி காவல் துறையினர் முத்துக்குமாரின் உடலை பரிசோதனைக்காக அனுப்பி வைத்த நிலையில், பிரேத பரிசோதனை முடிவில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை நடந்ததற்கான அதற்கான அடையாளம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், சம்பவ தினத்தன்று இரவு வீட்டில் தூங்கியவர் மறுநாள் காலையில் வீட்டில் வாசலில் எப்படி இறந்து கிடந்தார்? என்ற சந்தேகம் வலுத்தது. இதனையடுத்து, மனைவியிடமிருந்து விசாரணையை காவல் அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
முதலில் முன்னுக்குப்பின் முரணாக அவர் பதில் தெரிவித்த நிலையில், விசாரணையை தீவிரப்படுத்தியதில் திருமணத்திற்கு முன் இருந்த காதல் உறவும், திருமணம் முடிந்த பின்னர் அவனுடன் தொடர்ந்து பழக்கம் வைத்து இறுதியில் அது கொலையில் முடிந்தது தெரியாய்வந்துள்ளது. சுமிதாவின் வாக்குமூல அடிப்படையில், அவரது கள்ளக்காதலன் சுந்தரை காவல் துறையினர் கைது செய்தனர்.
சுந்தரிடம் மேற்கொண்ட விசாரணையில், சுந்தருக்கும் - சுமிதாராவுக்கும் திருமணத்திற்கு முன்பே காதல் உறவு பழக்கம் இருந்து வந்த நிலையில், சுமித்தரவின் திருமணத்திற்கு பின்னர் இது இருவருக்கும் இடையேயான கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த விஷயத்தை அறிந்த முத்துக்குமார் அவ்வப்போது கள்ளக்காதல் ஜோடியை கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சுமித்ரா தனது கணவனை கள்ளக் காதலனை வைத்து கொலை செய்ய திட்டமிட்டு, முத்துக்குமார் நள்ளிரவில் உறங்கிக் கொண்டிருந்த போது அவரது முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்ததும், பின்னர் போதையில் தவறி விழுந்துவிட்டதாக காட்டுவதற்கு வாசலில் உடலை இழுத்து வந்து வைத்து உறங்கியதும் அம்பலமானது.
மேலும், இத்தனை கொடூரத்தையும் அரங்கேற்றிவிட்டு குடும்பத்தாரை நம்ப வைத்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி கண்ணீர் வடித்த சம்பவமும் நடந்துள்ளது.
Tags :