ஒர் அமெரிக்கர் மற்றும் ஆறு உக்ரேனியர்கள் உட்பட ஏழு வெளிநாட்டினரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. 

by Admin / 18-03-2026 09:45:09am
ஒர் அமெரிக்கர் மற்றும் ஆறு உக்ரேனியர்கள் உட்பட ஏழு வெளிநாட்டினரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. 

மியான்மரைச் சேர்ந்த இன ஆயுதக் குழுக்களுக்கு ட்ரோன் போர் முறையில் பயிற்சி அளித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஒர் அமெரிக்கர் மற்றும் ஆறு உக்ரேனியர்கள் உட்பட ஏழு வெளிநாட்டினரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. 

அமெரிக்காவைச் சேர்ந்த மேத்யூ ஆரோன் வான் டைக்மற்றும் உக்ரைனைச் சேர்ந்த குர்பா பெட்ரோ, ஸ்லிவியாக் தாராஸ், இவான் சுக்மனோவ்ஸ்கி, ஸ்டீபன்கிவ் மரியன், ஹோன்சாருக் மக்சிம் மற்றும் காமின்ஸ்கி விக்டர் ஆகிய ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் ,இந்தியாவிற்குச் சுற்றுலா விசாவில் வந்து, முறையான அனுமதி இன்றி மிசோரம் வழியாக மியான்மருக்குள் நுழைந்து அங்குள்ள இன ஆயுதக் குழுக்களுக்கு ட்ரோன் இயக்கம், அசெம்பிளி மற்றும் ஜாமிங் தொழில் நுட்பங்களில் பயிற்சி அளித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், ஐரோப்பாவிலிருந்து ட்ரோன்களைக் கடத்தி வந்ததாகவும்  தேசிய புலனாய்வு முகமை குற்றம் சாட்டியுள்ளது.

உக்ரேனியர்களில் மூன்று பேர் டெல்லியிலும், மூன்று பேர் லக்னோவிலும் கைது செய்யப்பட்டனர். அமெரிக்கர் கொல்கத்தா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

டெல்லி நீதிமன்றம் இவர்களை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் மார்ச் 27, 2026 வரை 11 நாட்கள் தேசிய புலனாய்வு முகமைகாவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.இந்த மியான்மர் ஆயுதக் குழுக்கள், இந்தியாவில் தடை செய்யப்பட்ட வடகிழக்கு மாநில கிளர்ச்சிக் குழுக்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், இது இந்தியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைவதாகவும்  தேசிய புலனாய்வு முகமை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
உக்ரைன் வெளியுறவு அமைச்சகம் தனது குடிமக்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தூதரக அணுகுமுறையைக் கோரியுள்ளது. அமெரிக்க தூதரகம் இந்த விவகாரத்தை அறிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஒர் அமெரிக்கர் மற்றும் ஆறு உக்ரேனியர்கள் உட்பட ஏழு வெளிநாட்டினரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. 
 

Tags :

Share via