வணிக  ரீதியான எல்.பி.ஜி  சிலிண்டர் தட்டுப்பாடு- உணவகங்கள் மற்றும் ஹோட்டல்  தொழிலை  மிக மோசமாகப் பாதித்துள்ளது.

by Admin / 18-03-2026 10:04:26am
வணிக  ரீதியான எல்.பி.ஜி  சிலிண்டர் தட்டுப்பாடு- உணவகங்கள் மற்றும் ஹோட்டல்  தொழிலை  மிக மோசமாகப் பாதித்துள்ளது.

மேற்கு ஆசியாவில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, இந்தியா முழுவதும்  வணிக  ரீதியான எல்.பி.ஜி  சிலிண்டர்களுக்குக் கடுமையான தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.  இது   உணவகங்கள் மற்றும் ஹோட்டல்  தொழிலை  மிக மோசமாகப் பாதித்துள்ளது. எல்.பி .ஜி தட்டுப்பாட்டைக் கண்டித்தும், ஹோட்டல்களை  அத்தியாவசிய சேவை பிரிவில் சேர்க்கக் கோரியும் மார்ச் 23 அன்று கேரளா முழுவதும் உள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடைக்க கேரளா ஹோட்டல்கள் மற்றும் உணவக சங்கம் அழைப்பு  விடுத்துள்ளது. தலைநகர்  டெல்லியில் எரிவாயு தட்டுப்பாட்டால் பல உணவகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.  சில உணவகங்கள் தங்களின் உணவுப் பட்டியலை 50-லிருந்து 15-ஆகக் குறைத்துள்ளன.  மேலும், சமையல் எரிவாயு கிடைக்காததால் சில உணவகங்கள்  எல்.பி.ஜி கூடுதல் கட்டணம்" வசூலிக்கத் தொடங்கியுள்ளன.கொச்சியில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன.மும்பை, பெங்களூரு மற்றும் சென்னை  போன்ற  பெரு நகரங்களிலும்  வணிக ரீதியான சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டதால் உணவகங்கள் ஸ்தம்பித்துள்ளன. கேரளாவில் உள்ள ஹோட்டல்களில் சுமார் 40% வரை ஏற்கனவே மூடப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Tags :

Share via