"அதிமுக, தவெக ஒரே நோக்கம் கொண்டுள்ளது".. சி.வி சண்முகம்
அதிமுக தற்போது இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில், இன்று சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதே அதிமுக மற்றும் தவெகவின் முதன்மையான நோக்கம். அதிமுகவினரின் ரத்தத்தில் திமுக எதிர்ப்பு உள்ளது. அதன் அடிப்படையிலேயே தவெகவுக்கு ஆதரவளித்துள்ளோம்” என்றார். முன்னதாக நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில், தவெகவுக்கு அதிமுக ஆதரவு கொடுத்தது.
Tags :


















