கைநீட்டிய காவலர் ஆயத்தப்படைக்கு மாற்றம்.

லஞ்சம் வாங்குவதை கட்டுப்பாடுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்தாலும் அந்த கரங்கள் கை நீட்டுவதைத் நிறுத்தாமல்தான் இருந்துவருகின்றன.கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகே, வாகன ஓட்டியிடம் போக்குவரத்து காவலர் ரமேஷ் ரூ.200 லஞ்சம் வாங்கியுள்ளார். இதுகுறித்த வீடியோ இணையதளத்தில் வைரலான நிலையில், ரமேஷ் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாதவன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். வாகன ஓட்டியிடம், “அபராதம் செலுத்து அல்லது ரூ.200 கொடு” என கூறி காவலர் லஞ்சம் வாங்கியுள்ளார்.
Tags : கைநீட்டிய காவலர் ஆயத்தப்படைக்கு மாற்றம்.